இலங்கையில் தொழு நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு – அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தொழு நோய் தடுப்பு இயக்கத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு!
Sunday, October 22nd, 2023
இலங்கையில் தொழு நோயாளர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தேசிய தொழு நோய் தடுப்பு இயக்கத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், ஹெந்தலையிலுள்ள தேசிய தொழுநோய் தடுப்பு வைத்தியசாலையில் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த வருடம் தொழு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மத்திய தொழுநோய் பிரிவு அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ் நகரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் திவிரம்!
யாழ் பல்கலைக்கழக மோதல் விவகாரம் - மாணவர்களுக்கான தண்டணைகள் இறுதி செய்யப்பட்டன!
வவுனியாவில் வான் பாயும் 479 குளங்கள் - இதுவரை 64 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நி...
|
|
|


