இலங்கையில் தொழில் செய்யாத 1465 பேர் அரச சார்பற்ற நிறுவனங்களினால் கோடீஸ்வரர்கள்?

Saturday, January 12th, 2019

நாட்டில் எவ்வித தொழிலிலும் ஈடுபடாது 1465 பேர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பணத்தைக் கொண்டு கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு கோடீஸ்வரர்களாக மாறியுள்ள அனைவரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் இந்த நபர்களுக்கு 17 மேற்குலக நாடுகள் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபா பணத்தை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கோடீஸ்வரர்களுக்கு உதவும் 381 வெளிநாட்டு கோடீஸ்வரர்கள் இலங்கையில் இருப்பதாகவும் இவர்கள் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனச் செயற்பாட்டாளர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒக்ரோபர் மாதம் 27ம் திகதி முதல் இதுவரையில் 17 அரச சார்பற்ற நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரச சார்பற்ற நிறுவனங்களின் கோடீஸ்வரர்கள் எவ்வாறு பணத்தை செலவிடுகின்றார்கள் என்பது பற்றி அரசாங்கம் கண்டறியவில்லை.

அரசியல், தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இந்த கோடீஸ்வரர்கள் தலையீடு செய்து வருகின்றனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related posts: