இலங்கையில் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள இரண்டு வங்கிகளுக்கு அனுமதி?
Thursday, January 2nd, 2020
இலங்கையில் தமது செயற்பாடுகளை நிறுத்திக்கொள்வதற்கு இரண்டு இந்திய வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் எக்ஸிஸ் ஆகிய வங்கிகளே அவையாகும்.
இலங்கையின் நீதிக்கு உட்பட்டு சராசரி கடன் விகிதத்தை குறைக்கவேண்டும் என்ற கட்டளையை இந்த இரண்டு வங்கிகளும் செயற்படுத்தவில்லை.
இதனையடுத்தே இந்த இரண்டு வங்கிகளின் அனுமதிப்பத்திரங்களையும் ரத்துச்செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது
எக்ஸிஸ் வங்கி 2011 இல் இலங்கையில் தமது செயற்பாடுகளை ஆரம்பித்தது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 2006ம் ஆண்டு இலங்கையின் வங்கித்துறையில் பிரவேசித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
விமானப்படை உலங்கு வானூர்தி விபத்து!
பிரதமர் பின்லாந்து பயணம்!
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளர் நியமனம்!
|
|
|


