இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண எச்சரிக்கை!
Wednesday, May 8th, 2024
இலங்கையில் ஆண்டு தோறும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தினால் அதிகரித்துச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டில் 30657 ஆக காணப்பட்ட சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை, 2023 ஆம் ஆண்டில் 72546 ஆக உயர்வடைந்துள்ளது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.
எனவே இவ்விடயத்தில் அதிக கவனமெடுத்து சுகாதார அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை நாடு முழுவதிலும் முன்னெடுக்கவுள்ளது அமைச்சர் ரமேஷ் பத்திரன மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மேதினம்: போக்குவரத்து சபையிடம் 5,000 பஸ்கள் கோரிக்கை!
கழிவுகளும் பொருளீட்டக் கூடிய சொத்துக்கள்- அமைச்சர் சம்பிக்க ரணவக்க!
தொடர் மழை: இரணைமடு குளத்தின் 2 வான் கதவுகள் திறப்பு!
|
|
|


