இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 981ஆக அதிகரிப்பு!

Monday, May 18th, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 981ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் நேற்று மட்டும் 21 பேர் கோரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளதுடன் இலங்கையின் எண்ணிக்கை 981 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களில் மேலும் 18 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 981 பேரில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 415 நோயாளிகள் 07 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் மேலும் 209 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 22 வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் 533 பேர் முப்படையினர் எனவும், அவர்களில் 521 பேர் கடற்படையினர் என்று இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாதிழக்கப்பட்ட கடற்படையினரில் 189 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும், 332 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனரெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 11 இராணுவத்தினரும், ஒரு விமானப்படைச் சிப்பாயும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் முப்படையினருடன் நெருக்கமாகப் பழகிய 36 உறவினர்களும் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இந்நிலையில் தற்போது பொரோனா பரவல் காரணமாக 3 ஆயிரத்து 302 பேர், 36 தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரவித்துள்ளார். மேலும் 9 ஆயிரத்து 441 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts: