இலங்கையில் கொரோனா முடக்க காலத்திலும் சாலை விபத்துக்களில் 1900 பேர் பலி – பொலிஸார் தெரிவிப்பு!
Tuesday, December 29th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று காலத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் 1900 பேர் பலியாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் ஏற்பட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட மார்ச் மாதம் தொடக்கம் இவ் விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை உலகளவில், சாலை போக்குவரத்து விபத்துகளின் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.25 மில்லியன் மக்கள் இறக்கின்றனர். அதனடிப்படையில் இலங்கை பொலிஸாரின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இலங்கையில், நாளாந்தம் ஏழு முதல் எட்டு பேர் இறக்கின்றனர் என்றும் இதன் விளைவாக ஆண்டுக்கு சுமார் 3,000 பேர் இறக்கின்றனர் என்றும் தெரிழயவந்தள்ளமை குறிப்பீடத்தக்ககது
Related posts:
ஓய்வூதியம் கிடைக்காதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது - உள்நாட...
இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்ட பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியார் பேருந்து உரிமையாள...
|
|
|


