இலங்கையில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 1141 ஆக உயர்வு!
Monday, May 25th, 2020
இலங்கையில் நேற்று கொரோனா நோயாளிகள் 52 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. இதையடுத்து இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1141 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் நேற்று அடையாளம் காணப்பட்ட 52 நோயாளிகளில் 49 பேர் குவைத்தில் இருந்து வந்தவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
ஏனைய மூவரல் ஒருவர் இந்தோனேஷியாவில் இருந்து வந்தவர் எனவும் இருவர் கடற்படை சிப்பாய்கள் எனவும் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான 457 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் 674 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள குறிப்பிடத்தக்கது.
Related posts:
புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கு நாளை திறப்பு!
மாணவர்களுக்கான பண வவுச்சர் விநியோகம் பூர்த்தி!
புதிதாக 600 இடங்களில் WiFi வசதிகள்!
|
|
|


