இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவருக்கு மீண்டும் கொரோனா!
Saturday, May 2nd, 2020
ஜா-எலா பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்றுத் தாக்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 17ஆம் தேதி அங்கோடாவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்றதன் பின்னர் குணமடைந்தார் என ஏப்ரல் 17ஆம் திகதி அன்று வீடு திரும்பினார்.
இதன் பின்னர் திடீரென இன்று மார்பு வலி காரணமாக அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நோயாளி பி.சி.ஆ பரிசோதனைக்கு மீண்டும் உட்படுத்தப்பட்டபோது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் அவர் மேலதிக சிகிச்சைக்காக அங்கோடாவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Related posts:
தொடருந்து சேவையில் பாரிய அபிவிருத்தித் திட்டம் !
கொக்குவில் பகுதியில் ஹெரோயின் வியாபாரம்செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது -1,530 மில்லிகிராம் ஹெரோயின...
தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ!
|
|
|


