இலங்கையில் கொரோனா தொற்றினால் 30ஆவது மரணம் பதிவானது!
Saturday, November 7th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 30 ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
நீரிழிவு நோயுடன், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நீர்வழங்கல் வடிகாலமைப்புத் துறையில் வளர்ச்சி!
கடந்த வருடம் 2 ஆயிரம் கோடி ரூபா கடன் உதவி!
மாணவர் கடன் திட்டத்திற்கான கால அவகாசம் நீடிப்பு!
|
|
|


