இலங்கையில் கொரோனா உயிரிழப்பு 9ஆக அதிகரிப்பு !

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுயள்ளார்.
அத்துடன் கொழும்பு 15 ஐச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்றால் ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த குருநாகல் பொல்பித்திகம பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ள நிலையில், இன்று மோதரைப் பகுதியைச் சேர்ந்த பெண்ணும் கொரோனாவால் உயிரிழந்துள்ளமையை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையர்கள் உள்ளிட்ட 26 கடற்படை வீரர்கள் யேமன் கிளர்ச்சியாளர்களினால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்!
பண்டிகை காலத்தில் முடக்கல் சாத்தியமில்லை - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவிப்பு!
இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளுக்கான கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க ஹொங்கொங் தீர்மானம்!
|
|