இலங்கையில் காலநிலை தொடர்பான ஆய்வு நிலையமொன்றை அமைக்க ஜேர்மன் நடவடுக்கை!

இலங்கையில் காலநிலை தொடர்பான ஆய்வு நிலையமொன்றை அமைப்பதற்கு ஜேர்மன் தயாராகி வருகிறது.
இதற்காக ஜேர்மனின் சன்ஃபாமின் நிறுவனம் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது.
அந்த நிறுவனத்தின் தலைவர் பீற்றர் பூமகேவின் தலைமையிலான குழுவொன்று பிரதமர் தினேஷ் குணவர்த்தனவைச் சந்தித்து இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நவீன விவசாயம், தொழில்நுட்ப தொடர்பாடல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
காலநிலைக்காக இந்த விடயங்களைப் பயன்படுத்தும் வகையிலேயே விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை மீள் எரிசக்தி தொழில்நுட்பம் தொடர்பான அறிவை இளைஞர்கள் இதன் மூலம் பெற்றுக்கொள்ள பெரும் உதவியாக இது அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வாக்காளர் பதிவு கால நீடிப்பு!
இன்றுமுதல் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விநியோகம்!
கர்ப்பை கழுத்து புற்றுநோய்க்கு எதிராக இந்தியா உருவாக்கும் தடுப்பூசி!
|
|