இலங்கையில் காணாமல்போன சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்பில்  ஐ.நாவில் குழப்பம்!

Sunday, January 21st, 2018

வடக்கில் போரின் பின்னர் காணாமல்போன சிறுவர்களில் 661 பேர் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால் ஐ.நாவில் இடம்பெறும் 77 ஆவது அமர்வின் சிறுவர் உரிமை மாநாட்டில் இலங்கை அரசு கூறிய புள்ளி விவரம் இதிலிருந்து மாறுபட்டுள்ளது. இதனால் ஐ.நா அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுகின்றது.

ஜெனிவாவில் இடம்பெறும் 77 ஆவது ஐ.நா கூட்டத்தொடரின் சிறுவர் உரிமை மாநாடு ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் சிறுவர்களின் கல்வி, சுகாதாரம், சட்டம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது இலங்கையில் இடம்பெற்ற போரின்போது சிறுவர்களும் போராளிகளாகவும் ஏனைய வகையிலும் இருந்து அரசிடம் சரணடைந்த அனைவரும் விடுவிக்கப்பட்டனரா என்ற கேள்வி அமர்வில் எழுப்பப்பட்டது.

இறுதிப் போரின் பின்னர் சிறுவர் போராளிகளாக இருந்த 594 பேர் அரச படைகளிடம் சரணடைந்தனர். இவர்கள் அனைவரும் மறுவாழ்வின் பின்பு உறவுகளுடன் இணைக்கப்பட்டனர் என்று ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க பதிலளித்தார்.

Related posts: