இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில் ஆர்வம் காட்டும் சினோபெக் நிறுவனம் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, July 5th, 2023

இலங்கையில் சினோபெக் நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதில் ஆர்வம் காட்டுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் சினோபெக் நிறுவனத்துக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கு சைனா ஹார்பர் பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விருப்பம் தெரிவித்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


ஈழமக்கள் ஜனநாயக கட்சி செய்த பெரும்பணிகளுக்கு யாழ்.குடாநாடே சாட்சி சொல்லும் - கட்சியின் நல்லூர் நிர்வ...
பாடசாலைகள் மீள ஆரம்பித்த பின்னரே பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் மீள் பரிசீலனை - பரீட்சைகள் திணைக்களம்...
எரிபொருள் விலை சூத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு - வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அறிவிப்பு!