இலங்கையில் இதுவரை 95 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன – சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவிப்பு!

Tuesday, February 2nd, 2021

இலங்கையில் இதுவரை 95 ஆயிரத்து 550 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ரசெனிகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த 29ஆம் திகதிமுதல் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் நேற்றையதினம் மாத்திரம் 36 ஆயிரத்து 396 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 000

Related posts: