இலங்கையில் இதுவரையில் 185,118 PCR பரிசோதனைகள் நிறைவு – கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தகவல்!

இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக இதுவரையில் ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 118 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் மாத்திரம் ஆயிரத்து 120 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முப்படையினரின் கீழ் இயங்கி வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் இதுவரையில் 30 ஆயிரத்து 524 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வெளியேறியுள்ளதாகவும் குறித்த செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது 42 தனிமைப்படுத்தல் மையங்களில் 4 ஆயிரத்த 756 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இராணுவத்தினரின் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இன்றைய தினம் 16 ஆம் திகதி மேலும் 15 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|