வடபகுதியில் சுமார் 50,000 மீனவர்கள் பாதிப்பு!

Monday, August 15th, 2016

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களின் வருகையால் வடபகுதியில் சுமார் 50,000 மீனவர்கள் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மீனவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஒரு மாத்திற்கு சுமார் 6000 இற்கும் அதிகமான இந்திய படகுகள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி தொழில் ஈடுபடுவதாக அகில இலங்கை மீனவர் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு இலங்கை கடற்பரப்பிற்கு அத்துமீறி வருகை தந்து மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் பொட்ரம் ரொலிங் முறையை பயன்படுத்துவதால், இலங்கை மீன் வளம் முற்றாக அழிக்கப்படுவதாகவும், இதன் காரணமாக வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் வருவதை தடுக்கும் நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருதவதாகவும், இது தொடர்பில் இருநாட்டு அரச தலைவர்களும் இராஜதந்திர ரீதியில் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராய்ச்சி தெரிவித்தார்.

Related posts: