இலங்கையிலிருந்து விடைபெறுகின்றார் கியூபா தூதுவர்!
Friday, October 21st, 2016
இலங்கைக்கான கியூபா நாட்டின் தூதுவராக பணியாற்றிய ஃபொலோரெண்டினோ பெடிஸ்டா தனது பதவிக்காலத்தை நிறைவு செய்துகொண்டு இன்று இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
இலங்கைக்கான கியூபா நாட்டின் தூதுவராக பணியாற்றிய ஃபொலோரெண்டினோ பெடிஸ்டாவுக்கும் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
பெட்டிஸ்டா தனது பதவிக்காலத்தை நிறைவு செய்துகொண்டு இன்று இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளார். இதற்கு முன்னராக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவை சந்தித்த கியூப தூதுவர், இலங்கையில் தனது பணிகளை இலகுவாக மேற்கெள்வதற்கு ஊடகத்துறை அமைச்சர் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பெடிஸ்டா கியூபாவின் தூதுவராக இலங்கைக்கு ஆற்றிய சேவைகளை அமைச்சர் கயந்த கருணாதிலக்க பாராட்டியதாக ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts:
|
|
|


