இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலகத்தில்!

இலங்கையின் 74 வது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் இடம்பெற்றது.
இதன்போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனால் காலை 8.19 மணியளவில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
“சவால்களை முறியடிக்கும் நாளை” எனும் தொனிப்பொருளில் மாவட்ட அரசாங்க அதிபரின் சுதந்திர தின உரை இடம்பெற்றதுடன், உத்தியோகத்தர்களுக்கு மர கன்றுகளும் வழங்கப்பட்டது
தொடர்ந்து மாவட்ட செயலக வளாதத்தினுள் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன், மதகுருமார்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சூறாவளி காரணமாக 45 வீடுகள் பாதிப்பு!
ரயில்வே முகாமைத்துவ பணிகளுக்காக ஜிபிஎஸ் தொழில்நுட்பம் !
இரணைமடுக் குளத்திற்கு புதிய நீர்ப்பாசன பொறியியலாளர் நியமனம்!
|
|