இலங்கையின் வெளிவிவகார அமைச்சு புதிய கட்டடத்தொகுதிக்கு இடமாற்றப்படும் – வெளிவிவகார அமைச்சு!
Thursday, September 8th, 2016
இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, கொழும்பு 5 ஜாவத்த வீதியில் அமைந்துள்ள கட்டடத்தொகுதிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
சுமார் இரண்டு ஏக்கர் காணியில் உள்ள கட்டடத்துக்கு இந்த அமைச்சு இடமாற்றப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.வெளியுறவுத்துறை அமைச்சு தற்போது பிரித்தானிய செனட் அமைந்திருந்த வரலாறு கொண்ட கட்டடத்தில் 1972ஆம் ஆண்டு முதல் அமைந்துள்ளது.
இந்தநிலையில் வரலாற்று சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அமைச்சர் மங்கள சமரவீர விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க வெளிவிவகார அமைச்சு இடமாற்றப்படவுள்ளது.

Related posts:
அமெரிக்கா தனது விருப்பங்களை இலங்கை உள்ளிட்ட நாடுகள் மீது திணிக்காது - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அ...
சவுதி அரேபிய கடற்பரப்பில் தாழ் அமுக்கம் - இலங்கையில் சூறாவளி எச்சரிக்கை!
நாட்டுக்கு புதிய பொருளாதாரத்துடன், புதிய கல்வி முறையும் விரைவில் அறிமுகமாகும் - ஜனாதிபதி ரணில் விக்க...
|
|
|


