இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் பல மில்லியன்களால் அதிகரிப்பு!
Saturday, January 8th, 2022
இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம், கடந்த டிசம்பர் மாத இறுதியில் 3 ஆயிரத்து 137 தசம் 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரித்துள்ளது.
நவம்பர் மாத இறுதியில் இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் ஆயிரத்து 588 தசம் 4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இதேநேரம், நவம்பர் மாத இறுதியில், நாட்டின் தங்கத்தின் கையிருப்பின் பெறுமதி 382 தசம் 2 மில்லியன் டொலராக ஆக காணப்பட்டது.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாத இறுதியில் தங்கத்தின் கையிருப்பு பெறுமதி 175 தசம் 4 மில்லியன் டொலர் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, 206 தசம் 8 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம், மத்திய வங்கியினால் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், தங்கத்தின் கையிருப்பு 54 சதவீதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளதாக மத்திய வங்கியின் புதிய தகவல்களின் மூலம் அறியக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கோட்டபாயவால் மட்டுமே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் - மஹிந்த ராஜபக்ஸ!
பொருளாதார மறுமலர்ச்சி, அபிவிருத்திக்கான அமைச்சரவையின் உபகுழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!
இலங்கைக்கு அனைத்து சாதகமான வழிகளிலும் இந்திய அரசாங்கம் செயற்படும் - உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு !
|
|
|


