பொருளாதார மறுமலர்ச்சி, அபிவிருத்திக்கான அமைச்சரவையின் உபகுழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, September 13th, 2022

பொருளாதார மீளெழுச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பில் விரைந்து தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அமைச்சரவை உபக்குழுவொன்றினை நியமிப்பததற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, ஐந்து பேர் அடங்கிய அமைச்சரவை உபக்குழுவிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த அமைச்சரவை உபக்குழுவில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்களும் உள்ளடங்குகின்றனர்.

பொருளாதார மீளெழுச்சி மற்றும் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் முன்னுரிமை தீர்மானங்களை அங்கீகரிக்கவும் இனங்காண்பதற்கும் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

ஈ.பி.டி.பியின் வெற்றிக்கு முழுமையான பங்களிப்பை வழங்குவதாக யாழ் மாவட்ட ஜனநாயக சுகாதார சேவைகள் சங்கம் ...
ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழக்கும் நடவடிக்கையின் பின்னர் ஆகஸ்டில் பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்...
தகுதியற்ற 70 அதிகாரிகள் அடையாளம் - தகுதியான அரச அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர...