இலங்கையின் வான்பரப்பில் பயணித்த சர்வதேச விண்வெளி நிலையம்!
Wednesday, November 22nd, 2017
சர்வதேச விண்வெளி நிலையம் இலங்கையின் வான்பரப்பின் ஊடாக இன்று பயணித்துள்ளது. விண்வெளி நிலையம் இலங்கையர்களின் வெற்றுக் கண்களுக்கு இலகுவாக தென்படும் வகையில் பயணித்துள்ளது.
இன்று மாலை 6.25 மணியளவில் விண்வெளி நிலையத்தை அவதானிக்க முடிந்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய மலைநாட்டு பகுதியின் ஊடாக விண்வெளி நிலையம் பயணித்த காட்சிகள் புகைப்படங்களாக வெளியாகி உள்ளன. ஸ்ரீபாத பகுதியின் கிழக்கு திசையில் இந்த விண்வெளி நிலையத்தை அவதானிக்க முடிந்துள்ளது.கிட்டத்தட்ட ஐந்து நிமிடம் வரை சர்வதேச விண்வெளி நிலையம், இலங்கை வான்பரப்பில் பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் இரண்டாம் கட்டப் பணி 8ஆம் திகதி!
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தொழிலாளர் தின வாழ்த்து செய்தி!
பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு செயலாளருடன் விஷேட சந்திப்பு!
|
|
|


