இலங்கையின் மூத்த எழுத்தாளரும் பதிப்பாளருமான டொமினிக் ஜீவா காலமானார்..!

இலங்கையின் மூத்த எழுத்தாளரும் பதிப்பாளருமான மல்லிகை இதழ் ஆசிரியர் டொமினிக் ஜீவா நேற்று காலமானார்..
டொமினிக் ஜீவா 1927 ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்தார். இவரது தண்ணீரும் கண்ணீரும் நூல் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.
அவரால் நடத்தப்பட்டு வந்த மல்லிகை இதழ் இலக்கிய உலகில் மிகப்பிரபல்யமானதும் கௌரவமிக்கதுமாக கருதப்படுகிறது.
இதேவேளை டொமினிக் ஜீவா வரலாற்றின் ஒரு அத்தியாயம் என இலங்கையின் மூத்த எழுத்தாளரான தெளிவத்தை ஜோசப் தெரிவித்துள்ளார்.
டொமினிக் ஜீவாவின் மறைவு குறித்து வழங்கிய அனுதாப உரையில் அவர் இதனை கூறியுள்ளார்.
Related posts:
குப்பிளான் வடக்கில் பாழடைந்த வீட்டில் மிதிவெடி மீட்பு!
வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரி வைத்த ஆப்பு!
மத முரண்பாடுகளை தவிர்ப்பதற்கான ஜனாதிபதியின் நடவடிக்கை!
|
|