இலங்கையின் முதலீடு மற்றும் கல்வி மேம்பாட்டுக்கு அவுஸ்திரேலிய உதவி – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, June 1st, 2021

எமது நாட்டின் முதலீடுகள் மற்றும் கல்வித்துறையின் மேம்பாட்டுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டபபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையை தென் ஆசிய வலயத்தின் உயர் கல்வி மையமாக முன்னேற்றுவதற்கான உதவிகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அவுஸ்திரேலிய ஆராய்ந்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி (David Holly) ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச ஆகியோருக்கிடையே ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போதே இந்த விடயங்கள் தொடர்பாக அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி கருத்து தெரிவித்திருந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேநேரம் குறுகிய காலப்பகுதியில் எமது நாட்டு கடல் எல்லையில் இரண்டு கப்பல்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ்வாறான அனர்த்த சந்தர்ப்பங்களின்போது இடம்பெறும் சுற்றாடல் பாதிப்பை மதிப்பிடுவதற்கும்,

மற்றும் சேதனப் பசளையை அடிப்படையாகக்கொண்ட விவசாயத்திற்காக அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களுக்கும் – அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்பை இலங்கை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இதன்போது அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலியிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பெறுமதி சேர்க்கப்படும் உற்பத்திகளுக்கு அதிக முதலீட்டு வாய்ப்புக்களை இலங்கையில் உருவாக்குவதன் மூலம் – இந்தியா, மத்திய கிழக்கு உட்பட பல்வேறு நாடுகளை இலக்காகக்கொண்ட ஏற்றுமதிச் சந்தையை இலங்கையில் உருவாக்கும் இயலுமை பற்றியும் அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

இதனிடையே அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான 75 வருடகால நட்புறவை நினைவுபடுத்திய டேவிட் ஹோலி, கொவிட் சிகிச்சை நடவடிக்கைகளுக்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கிய ஒரு தொகை வைத்திய உபகரணங்கள் அடங்கிய விமானம் ஒன்று ஜூன் 03 ஆம் திகதி இலங்கைக்கு வர உள்ளதனையும் ஜனாதிபதியிடம் தெரிவிதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: