இலங்கையின் மின்வலு உற்பத்தியில் மாற்றம்!

Wednesday, March 20th, 2019

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மின்வலு உற்பத்தி வலைப்பின்னலில் 60 சதவீதத்தை புதுப்பிக்கக் கூடிய மின்வலு தோற்றுவாய்கள் மூலம் மின் உற்பத்தி செய்யக் கூடியதாக மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டங்களை வகுத்துள்ளது.

இதற்காக சூரியசக்தி மறுமலர்ச்சி என்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதன் கீழ் வவுனியா, வாழைச்சேனை உள்ளிட்ட 5 இடங்களில் 28 சூரிய மின்சக்தித் திட்டங்கள் அமுலாக்கப்பட உள்ளன.

இதற்காக 28 முதலீட்டாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.  

Related posts:

வீடுகள் தோறும் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்க உடனடி நடவடிக்கை - வேலணை பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்...
உத்தியோகபூர்வமாக பதவி விலகினார் கோட்டாபய ராஜபக்ச – புதிய பிரதமரை தெரிவுசெய்ய நாளையதினம் நாடாளுமன்றம்...
நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு குறித்த ஐ.நா. சாசனத்தையும் இலங்கை ஆதரிக்கும் – ஜனா...