இலங்கையின் மருந்து உற்பத்தி தொழிற்சாலை உடன்படிக்கை கைச்சாத்து!

இலங்கையின் முதலாவது மருந்து உற்பத்தி தொழிற்சாலை வலயமானது களுத்துறை வெலிப்பென்னவில் அமைக்கப்படவுள்ள நிலையில் அதன் உடன்படிக்கைகைச்சாதிடப்பட்டுள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த கைத்தொழில் வலயத்தில் தயாரிக்கப்படும் மருந்து வகைகளை அரச ஒளடக கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்யும்.
மேலும் இந்த தயாரிப்பு வலயத்தில் தற்பொழுது மலேசிய நாட்டின் நிறுவனமான ஓபிசி ஹெல்த் கேயார் நிறுவனம் மருந்து உற்பத்திக்காக முன்வந்துள்ளது. இந்ததிட்டத்திற்கு ஒரு கோடி அமெரிக்க டொலருக்கு அதிகமாக முதலீடு செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கையர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் மற்றுமொரு ஆபத்து – 04 பேர் பலி!
முடக்க நிலையால் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு 700 கோடி ரூபா நட்டம் - தனியார் பேருந்து உரிமையாளர...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்பு - பாடசாலை மாணவர்களின் விழிப்புணர்வையும், நிதி பற்றிய அறிவையும...
|
|