இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு நாமல் ராஜபக்ச வாழ்த்து!
Wednesday, July 20th, 2022
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 8வது நிறைவேற்று ஜனாதிபதிக்கு வாழ்த்துகள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்றிருந்தது.
ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிலையில் அதிகளவான வாக்குகள் பெற்றதையடுத்து ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க அறிவிக்கப்பட்டார்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் நாமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும், நாட்டின் பொருளாதாரத்தை சீர்செய்யும் பொறுப்பு உங்களிடம் உள்ளது.
எங்கள் தேசத்தை முன்னெடுத்துச் செல்ல மும்மூர்த்திகள் உங்களை ஆசீர்வதித்து வழிகாட்டட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
|
|
|


