இலங்கையின் பணவீக்கம் அதிகரிக்கும் – உலக வங்கி !
Monday, October 31st, 2016
பணவீக்கம் இந்த வருடமும் அடுத்தாண்டு (2017) அதிகரிக்குமென உலக வங்கி தெரிவித்திருக்கிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கொள்கை ரீதியான சீராக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் குறுகிய கால அடிப்படையில் ஸ்திரத்தன்மையை கொண்டிருந்தாலும் பணவீக்கம் அதிகரிக்குமென அந்த சர்வதேச நிதியமைப்பு கூறுகிறது.
இலங்கையின் அபிவிருத்தி தொடர்பாக பிந்திய இற்றைப்படுத்தலில் (ருpனயவந) உலக வங்கி இதனைத் தெரிவித்திருக்கிறது. இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அதன் எதிர்பார்ப்புகள் தொடர்பான அரையாண்டு அறிக்கையில் இந்த விபரத்தை உலக வங்கி வெளியிட்டிருக்கிறது. 2016இல் இலங்கையின் நிகர தேசிய உற்பத்தி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) மாற்றமடையாமல் தொடர்ந்து இருந்து வருமெனவும் 2017இல் 5.0மூ மாக வளர்ச்சியடையும் எனவும் அந்த அறிக்கையில் உலக வங்கி தெரிவித்திருக்கிறது.

Related posts:
ஹீத்ரோ விமான நிலையத்தில் புதிய ஓடுதளம் அமைக்க ஒப்புதல்!
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நெருக்கடியொன்றை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது.
கடன் தவணை செலுத்துவதற்கு பணக் கையிருப்பு உள்ளது - மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவ...
|
|
|


