இலங்கையின் சிறந்த அரச நிறுவனமாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவு!

கோப் குழுவினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் கடந்த ஒரு தசாப்த காலத்தில் மக்களுக்கு காத்திரமான சேவைகளை வழங்கிய நிறுவனமாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
அரசாங்க நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் 38 தொடர்பில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.இதில் மகளுக்கு மிகவும் சிறந்த முறையில் சேவையாற்றிய நிறுவனமாக பரீட்சைகள் திணைக்களம் கருதப்படுகின்றது.
பரீட்சைகள் திணைக்களத்தின் செயற்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஏனைய நிறுவனங்களை விடவும் சிறந்தமுறையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை சுங்கத் திணைக்களம், கலால் திணைக்களம் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு வருமானம் ஈட்டித் தரக்கூடிய நிறுவனங்களை விடவும் பரீட்சைகள் திணைக்களம் சிறந்த சேவைகளை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
அரச நிறுவனங்களை கணனிமயப்படுத்த நடவடிக்கை!
பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது - உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை என இராஜாங்க அ...
நிறைவுக்கு வந்தது அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு - பொதுமக்களுக்கு ஏற்படும் ...
|
|