இலங்கையின் கலாசார மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு அமெரிக்கா உதவும் – அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவிப்பு!

Wednesday, March 16th, 2022

இலங்கையின் பன்முக கலாசார மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கு அமெரிக்கா  நடவடிக்கை எடுத்து வருவதாக  அமெரிக்கத் தூதுவர்  ஜுலீ சங்  தெரிவித்துள்ளார்.

கண்டி அரசர்களின்  அரண்மனையைப்  பாதுகாத்தல் மற்றும்  ஸ்ரீ  தலதா மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள அரசர்களது அரண்மனையிலுள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்தை  மேம்படுத்தல் என்பவற்றுகாக  மானிய அடிப்படையில் 256,000 அமெரிக்க டொலர்  நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

கண்டிக்கு விஜயம் மேற கொண்டிருந்த அமெரிக்கத் தூதுவர் கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு  விஜயம் மேற்கொண்டார். இங்கு உரையாற்றிய அவர்,

கலாசாரங்கள் மற்றும் நாகரிகங்களை பாதுகாப்பதில், அமெரிக்கா கவனம் செலுத்தும். அந்த வகையில் இலங்கையிலுள்ள சில, அடையாளங்களைப் பாதுகாக்க அமெரிக்கா உதவும்.

பேராதனை பல்கலைக்கழகத்தில்  நான்கு பாரம்பரிய சடங்கு நடன வடிவங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய கைவினைப் பொருட்களை ஆவணப்படுத்திப் பாதுகாக்க அமெரிக்கா 2016 இல் நடவடிக்கை எடுத்திருந்தது.

மலையக கண்டிய கொஹொம்ப கங்கரிய நடனம்,  வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் கூத்து நடன நாடகம்,  கிழக்கு மாகாண ஆதிவாசி சடங்குகள் மற்றும் கலாசார நடைமுறைகள், மற்றும் தென் மாகாணத்தில் கோலம் பாரம்பரியவிடயங்கள் என்பவற்றைப் பாதுகாப்பதற்கு  116,000 அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

000

Related posts: