க.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பிக்கும் முடிவு திகதி 28 ஆம் திகதியுடன் நிறைவடையும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Wednesday, July 19th, 2023
2023 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இதேவேளை, 2022 கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வீதி விபத்துக்களால் 8 பேர் நாளாந்தம் உயிரிழப்பு - தண்டப்பணத்தை அதிகரிக்கக் கோரிக்கை!
வாக்குச்சீட்டுகளை அரச நிறுவனங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை - தபால் திணைக்களம்!
எரிபொருள் நெருக்கடிக்கு இன்னும் சில நாள்களில் தீர்வு - அமைச்சர் காமினி லொகுகே உறுதியளிப்பு!
|
|
|


