இலங்கையின் எதிர்கால பொருளாரார வளர்ச்சி பிராந்திய நாடுகளுக்கு முன்மாதிரி – பிரதமர்!

இலங்கையின் எதிர்கால பொருளாரார வளர்ச்சி பிராந்திய நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழும் பிரதமர்; ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
த எக்கனொமிஸ்ட் சஞ்சிகை ஹொங்கொங்கில் ஏற்பாடு செய்திருந்h 2017ம் ஆண்டில் உலகம் என்ற பேரிலான விசேட கருத்தரங்கில் பிரதான கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார்.
ஹொங்கொக் மாநாடு துறு மரியட் ஹோட்டல் இடம்பெற்றது. இதில் உலக புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களும், கல்விமான்களும், தொழில் முயற்சியாளர்களும் கலந்து கொண்டார்கள். இங்கு பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர்; ரணில் விக்ரமசிங்க இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் :
இலங்கையின் எதிர்கால பொருளாரார வளர்ச்சி பிராந்தியத்தின் எந்தவொரு நாட்டுக்கும் அச்சுறுத்தலாக அன்றி முன்மாதிரியாக திகழும். இந்துமா சமுத்திரத்தின் முக்கியமான இடத்தில் அமைந்துள்ள இலங்கை போன்ற சிறியதொரு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பிராந்திய ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. எனவே பிராந்தியத்தின் சகல நாடுகளுடனும் ஒத்துழைப்பையும், நட்புறவையும் வளர்க்க இலங்கை ஆர்வம் கொண்டுள்ளதென பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|