இலங்கையின் அனைத்து மாநகர சபைகளின் முதல்வர்களுக்கான மாநாடு யாழ்ப்பாணத்தில்!
Sunday, October 4th, 2020
இலங்கையில் உள்ள மாநகர சபைகளின் முதல்வர்கள் பங்குபற்றும் வருடாந்த மாநாடு தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை உள்ளூராட்சி மன்ற ஒன்றியங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி கேமந்தி குணசேகர நெறிப்படுத்தலில், யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த மாநாடு இடம்பெற்று வருகின்றது.
குறித்த முதல்வர் மாநாட்டில் இலங்கையில் உள்ள 24 மாநகர சபைகளின் முதல்வர்களில் 18 மாநகர சபை முதல்வர்கள் கலந்துகொண்டுள்ள போதும் 6 மாநகர சபைகளின் முதல்வர்கள் பங்குபற்றி இருக்கவில்லை.
அந்த வகையில், கொழும்பு, அக்கரைப்பற்று, நுவரெலியா, கல்முனை,பண்டாரவளை மற்றும் தெகிவளை-கல்கிசை ஆகிய மாநகர சபைகளின் முதல்வர்களே குறித்த மாநாட்டில் பங்குபற்றியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


