இலங்கையருக்கு மலேசியாவில் பல்வேறு தொழில்வாய்ப்புகள்.!
Friday, July 22nd, 2016
இலங்கைத் தொழின்மையாளர்களுக்கும் பயிற்றப்பட்ட ஊழியர்களுக்கும் மலேசியாவில் தொழில்வாய்ப்புகளை வழங்க மலேசியா இணக்கம் தெரிவித்துள்ளதுடன் இதுதொடர்பான உடன்படிக்கை இவ்வருட இறுதியில் இருநாடுகளுக்குமிடையே கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மலேசிய பிரதிப் பிரதமர் அஹமட் சஹீட் ஹமீட் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்குமிடையேயான உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாகவும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மலேசியாவுக்கான ஒரு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளுமாறு மலேசியப் பிரதிப் பிரதமர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, மிக அண்மையில் மலேசியாவுக்கு விஜயம் மேற்கொள்வதாக தெரிவித்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
Related posts:
பொருட்களின் விலைகள் உயர்வடையாது!
அரசியலமைப்பை திருத்த வேண்டும் - அமைச்சர் தயாசிறி ஜெயசேகர!
வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் தற்போது நாடு உள்ளது - கோட்டாபய ராஜபக்ஷ!
|
|
|


