இலங்கைத் தேயிலைக்கு சர்வதேச விருது!

Wednesday, June 13th, 2018

தீங்கு விளைவிக்காத கார்பன் உரத்தை குறைந்த அளவில் பயன்படுத்தி உற்பத்திசெய்யப்பட்ட தேயிலைக்கான சர்வதேச விருதினை இலங்கையின் தேயிலை உற்பத்தி நிறுவனம் ஒன்று பெற்றுள்ளது.

Ecovia Intelligence  என்ற அமைப்பினால் வழங்கப்படுகின்ற நிலையான முதன்மை உணவு விருது வழங்கலில் இலங்கை நிறுவனமொன்று இந்த விருதினை பெற்றுள்ளது.

இந்த விருதுகள் நிலைத்து நிற்கக்கூடிய உணவு உற்பத்தித்துறைக்கு உதவுகின்றவர்களுக்காக வழங்கப்படுகின்றன.

சுற்றுச் சூழலுக்கு தாக்கத்தை மிகக் குறைந்த அளவில் ஏற்படுத்துகின்ற வகையில் இலங்கையில் இருந்து ஐரோப்பாவில் சந்தைப்படுத்தப்படுகின்ற முதலாவது இலங்கைத் தேயிலை அங்கிகாரத்தை குறித்த தேயிலை உற்பத்தி நிறுவனம் பெற்றுள்ளது.

Related posts: