இலங்கைத் தேயிலைக்கான கேள்வி அதிகரிப்பு!
Tuesday, February 12th, 2019
இலங்கைத் தேயிலைக்கான கேள்வி கடந்த வாரம் ஏலச் சந்தையில் அதிகரித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி கடந்த வாரம் மொத்தமாக 7.2 மில்லியன் Kg தேயிலை விற்பனையாகியுள்ளது.
அதிக தரம் மற்றும் அதிக தரத்திற்கு அடுத்த தரம் ஆகிய வகைகளுக்கான விலைகளும் அதிகரித்திருந்த நிலையில் அதற்கான கேள்விகளும் அதிகரித்துள்ளன.
சிறந்த மேற்கத்தேய பி.ஒ.பி (BOP) தேயிலைக்கான விலை 1Kg -20 ரூபாவால் அதிகரித்திருந்தது.
பி.ஓ.பி.எஃப் (BOPF) தேயிலையின் விலை 1Kg- 20 -30 ரூபா வரையில் அதிகரித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வலிகாமம் பகுதியில் சிறுபோக வெங்காயச் செய்கை மும்முரம்
சிறிய பாடசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை!
நாட்டில் மின்சார நெருக்கடி தொடர்வதன் பின்னணியில் சதித்திட்டம் – அமைச்சர் நாமல் சந்தேகம்!
|
|
|


