இலங்கைக் கறிவேப்பிலைக்கு ஐரோப்பிய நாடுகளில் தடை!

இலங்கையின் கறிவேப்பிலையில் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூலக்கூறுகள் உள்ளடங்கியுள்ளன என்று தெரிவித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி, சைப்ரஸ், கிரேக்கம், மோல்டா ஆகிய நாடுகளுக்குள் இலங்கைக் கறிவேப்பிலையை கொண்டுவர வேண்டாமென எழுந்த சர்ச்சைகளை அடுத்தே இலங்கைக் கறிவேப்பிலைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகளவான கருவேப்பிலைகளைக் கொண்டுவருவது ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கையின் உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில் எதிர்மறை மாற்றங்களை ஏற்படுத்தலாமென சிலநாடுகள் அச்சம் வெளியிட்டிருந்தன.
இந்த நாடுகளுக்கு வரும் பயணிகள் இலங்கையில் இருந்து கறிவேப்பிலைகளை எடுத்துவர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் திகதி முதல் இந்தத் தடை நடைமுறைக்கு வருகிறது என்று இத்தாலியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
Related posts:
ஐந்து மாவட்டங்களில் நெல் அறுவடை ஆரம்பம்!
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் - வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சந்திப்பு - ஜப்பானுக்க...
கடந்த ஆண்டில் சுற்றுலாத்துறை மூலம் 1.13 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் - இலங்கை மத்திய வங்கி தெரி...
|
|