இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்தியா இணக்கம் – எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தகவல்!

இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கான பிரேரணைக்கு இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை தீர்க்க இந்த கடன் உதவியாக இருக்கும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அந்த பணத்தின் மூலம் மார்ச் மாதத்திற்குள் நாட்டுக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் எதிர்காலத்தில் இந்தியாவில் இருந்து நேரடியாக மின்சாரத்தை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வாக்குகளை எண்ணுவதில் புதிய முறை!
19 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு - பிரதமர் மஹிந்த ராஜபக்ச ...
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 17.6 வீதத்தால் அதிகரிப்பு - இலங்கை மத்திய வங்கி தகவல்!
|
|