இலங்கைக்கு 3 மில்லியன் டொலர் மருத்துவ உதவி வழங்குகிறது ஜப்பான்!

3 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துப்பொருட்களை இலங்கைக்கு வழங்க ஜப்பான் அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜப்பானியத் தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அங்கு ஜப்பானிய தூதுவருடன் முன்னாள் ஜனாதிபதி சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
தற்போது இலங்கைக்கு தேவையான மருந்துகள் தொடர்பில் ஜப்பானிய தூதரகத்துக்கு அறிவித்துள்ளதாகவும், ஜப்பானியத் தூதுவர் ஜப்பானிய அரசிடமிருந்து 3 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகளை இந்த மாதம் இலங்கைக்கு வழங்க தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அரசியல் அதிகாரம் எமது கைகளில் இருந்திருந்தால் மக்கள் இன்று வீதிக்கிறங்கவேண்டிய நிலை உருவாகியிருக்காத...
யாழ் நீதிமன்றில் பணம் திருடியவர் கைது!
தரைவழி இணைப்பு உடனடியாக நடைமுறைக்கு வரப்போவதில்லை - இந்தியா - இலங்க இடையிலான உறவு இப்போது இருப்பதை வ...
|
|