இலங்கைக்கு 164. 1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி – சர்வதேச நாணய நிதியம்!
Tuesday, May 14th, 2019
இலங்கைக்கு 164.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் முன்வந்துள்ளது.
இந்த தொகை இலங்கைக்கு வழங்கவுள்ள 5ஆவது கட்ட கடன் தொகையாக வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கை மத்திய வங்கி அந்நிய செலவாணி கையிறுப்புக்கான திட்டத்தை உரிய முறையில் கடைப்பிடிக்காமையினால் இந்த கடன் தொகை வழங்குவதில் கால தாமதம் இடம்பெற்றிருந்தது.
தற்பொழுது அந்நிய செலவாணி தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அந்நிய செலவாணி கையிறுப்பு தொடர்பான நடைமுறைகளில் திருப்தி கொண்டிருப்பதினால் சர்வதேச நாணய நிதியம் இந்த தொகையை விடுவிப்பதற்கு முன்வந்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி நிர்வாக பணிப்பாளரும் சபையின் பதில் தலைவருமான மிட்சுஹிரு புருஸ்வா தெரிவித்துள்ளார்.
Related posts:
மின்சார சபையின் பொறியியலாளர்கள் அதிரடி தீர்மானம்!
வீழ்ச்சி அடைந்த பாதுகாப்பை மீண்டும் கட்டியெழுப்புவேன் - கோட்டாபய ராஜபக்ஷ!
கொரோனா தொற்று: உலகில் ஒரு மில்லியனை தாண்டிய நோயாளர்கள்!
|
|
|


