இலங்கைக்கு 162.6 மில்லியன் டொலர்கள் கடன் தொகையை விடுவிக்க IMF முடிவு!

Saturday, November 19th, 2016

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் கடன் தொகையின் இரண்டாவது பகுதியினை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் பிரகாரம், 162.6 மில்லியன் டொலர்கள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு இதுவரை 325.1 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 1.45 பில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMF

Related posts: