30 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி – சதோச தலைவர்!

Monday, September 25th, 2017

உள்நாட்டு அரிசித் தேவையை  பூர்த்திசெய்யும் பொருட்டு விரைவில் 30 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவிருப்பதாக சதோச தலைவர் ரி.எம்.கே.பீ.தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு அரிசியின் விலையையும் விட இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக அரச மற்றும் தனியார் துறை வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும், லங்கா சதோச விற்பனை நிலையங்களில் அரிசியின் விலை தனியார் நிறுவனங்களின் விலை மட்டத்தையும் விட குறைந்த அளவில் காணப்படுவதாக சதோச விற்பனை நிலையங்களில் 75 ரூபாவிற்கும் 85 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலை மட்டங்களில் அரிசி விற்பனை செய்யப்படுவதாவும்க அவர் குறிப்பிட்டார்.

சதோச நிறுவனத்திற்கு மேலதிகமாக தனியார் துறைக்கும் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரிசியின் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து சில தனியார் வர்த்தகர்கள் அரிசியின் விலையைக் அதிகரித்திருப்பதாகவும்  சதோச நிறுவனத்தின் தலைவர் கூறினார்.

நாளாந்தம் ஆறாயிரத்து 500 மெற்றிக் தொன் அரிசி தேவைப்படுவதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஹேமந்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார். இதில் 5 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி உள்நாட்டு அரிசியாகும். இறக்குமதி செய்யப்படும் அரிசியின் தரம் உயர்ந்த மட்டத்தில் உள்ள போதிலும் மக்கள் அவற்றை மிகவும் குறைவாகவே பயன்படுத்துவதாகவும் சதோச தலைவர் ரி.எம்.கே.பீ.தென்னக்கோன் மேலும் தெரிவித்தார்.

Related posts: