இலங்கைக்கு 16.5 பில்லியன் ரூபா நிதி உதவி வழங்க இணங்கியது சீன அரசாங்கம்!

சீன அரசாங்கம் இலங்கைக்கு 16.5 பில்லியன் ரூபா நிதி வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
சீன கம்யூனிச கட்சியின் மத்திய செயற்குழுவின் அரசியல் சபை உறுப்பினர் யங் ஜியேஷி தலைமையிலான அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டனர். இந்தநிலையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய இந்த நிதி வழங்கப்படுவதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சீனாவின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவகத்தின் தலைவர் மற்றும் திரைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் கடந்த 9 ஆம் திகதி கையொப்பமிட்டனர்.
இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா தொடர்ந்தும் உதவும் என, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன உயர்மட்டக்குழு உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பால் மாவின் விலை உயர இடமளிக்கப்படாது – நிதி அமைச்சர்!
அத்துமீறும் வள்ளங்களை கட்டுப்படுத்த சட்டத்தில் திருத்தம்!
தடையின்றி மின்சாரம் வழங்குவதில் சிக்கல்கள் நிலை - எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு!
|
|