தடையின்றி மின்சாரம் வழங்குவதில் சிக்கல்கள் நிலை – எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு!

Saturday, February 27th, 2021

நீர் மின் உற்பத்தி படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகின்றமையினால் தடையின்றி மின்சாரம் வழங்குவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன என மின் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் வறண்ட வானிலை காரணமாக 74% மின்சார உற்பத்தியை நிலக்கரி, டீசல் மற்றும் வெப்பம் ஆகியவற்றின் ஊடாகவே பெற வேண்டிய நிலைமை காணப்படுகின்றது எனவும் அந்த அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை இந்த நாட்களில், மொத்த மின் உற்பத்தி சுமார் 38.46 ஜிகாவாட் ஆகும். வறண்ட வானிலை காரணமாக நீர் மின் உற்பத்தி 23.1% ஆக குறைந்துள்ளதாக இலங்கை மின்சார வாரியம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனாலும் எந்தவிதமான தடைகளும் இல்லாமல் மின்சாரத்தை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார வாரியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: