அமைச்சர் விஜயதாஸ தொடர்பில் ஐ.தே.க. தீர்மானிக்கும் -அமைச்சர் சம்பிக்க

Tuesday, August 15th, 2017

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருக்க வேண்டுமா அல்லது அமைச்சரவையில் இருக்க வேண்டுமா என்பது குறித்து ஐக்கிய தேசிய கட்சியே தீர்மானிக்க வேண்டும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செய்தியாளர் சந்திப்பு கொழுப்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, குற்றவாளிகள் தப்பிக்க இடமளிக்க முடியாது என்று குறிப்பிட்ட அமைச்சர், “இந்த ஆட்சியில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் எவ்வித தடையும் இன்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று கடந்தகால ஊழல் மோசடிகள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். இதற்கு நீதியமைச்சர் செயற்பட வேண்டும். கடந்த கால குற்ற விசாரணைகளை முன்னெடுப்பதில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ செயற்படும் விதமும் முன்வைக்கும் கருத்துக்களும் முரண்பாடாக உள்ளன. அவர் அரசாங்கத்தில் இருந்துகொண்டு முரண்பாடாக செயற்பட முடியாது. எனவே அவர் அரசாங்கத்தில் இருக்க வேண்டுமா அல்லது அமைச்சரவையில் இருக்க வேலண்டுமா என்பது தொடர்பில் ஐ.தே.க. தீர்மானிக்க வேண்டும். அது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

வறிய மாணவர்களின் உயர்தர கல்வியை ஊக்குவிக்கும் 'ப்ரக்ஞாபந்து' புலமைப்பரிசில் நிதியம் பிரதமர் தலைமையில...
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் தொடர்ந்து நிறுத்தம் - மோட்டார் வாகன போக்குவரத்து த...
ஊடக நிறுவனங்கள் தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி!