இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்கடொலர் நிதியுதவி – IMF
Wednesday, October 18th, 2017
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான மூன்றுவருட விரிவாக்கப்பட்ட நிதித்திட்டத்தின் கீழ் மூன்றாம்கட்ட நிதியுதவியாக 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பாக சர்வதேச நாணயநிதியம் விடுத்துள்ள அறிக்கையில் ஐஆகு அதிகாரிகள் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கிடையில் இதுதொடர்பில்காத்திரமான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த விடயத்தில் உடன்பாடு எட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. சர்வதேச நாணயநிதியம் இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு மூன்றுவருட திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிவருகின்றது.
இது தொடர்பில் இலங்கை முன்வைத்த கோரிக்கை விடயத்தில் இலங்கை அரசாங்கம் அடுத்த மாதம் நிறைவேற்றப்படவுள்ள வரவுசெலவுத்திட்டத்தை அடுத்து இந்த திட்டத்திற்கு நாணயநிதியம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
Related posts:
|
|
|


