இலங்கைக்கு வரும் விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தரித்தல் கட்டணங்களை அறவிடாதிருக்க அமைச்சரவை தீர்மனம்!

இலங்கைக்கு வரும் விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தரித்தல் கட்டணங்களை அறவிடாதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இலங்கையில் எதிர்வரும் 26 ஆம் திகதிமுதல் விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள விமான நிலையம் மற்றும் ரத்மலானா விமான நிலையங்களே இவ்வாறு திறக்கப்படவுள்ளன.
இந்த நிலையிலேயே நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கட்டணங்களை அறவிடாதிருக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி இம்மாதம் 26 ஆம் திகதிமுதல் ஜனவரி 19 ஆம் திகதிவரை இலங்கைக்கு வரும் விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தரித்தல் கட்டணங்களை அறவிடாதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
குடாநாட்டில் 60 வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு ஆட்பட்டுள்ளனர்!
தபால் மூல வாக்காளர்களின் 560,000 விண்ணப்பங்கள் செல்லுபடி!
யாழ்.பல்கலை வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரல்!
|
|