இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
Friday, April 7th, 2017
கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டின் மார்ச்மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தகவல்கள் தெரிவித்துள்ளன.
2016ம் ஆண்;டு மார்ச் மாதம் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து, 841 சுற்றுலா பயணிகள்இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.இந்த நிலையில், இவ்வாண்டின் மார்ச் மாதத்தில் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 76 சுற்றுலா பயணிகளே இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைதெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கையானது, 2016ம் ஆண்டைவிட 2.5 சதவீதத்தால் 2017ம் ஆண்டில் வீழ்ச்சியடைந்துள்ளது.கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், ஓடுபாதை சீரமைப்பு பணிகளுக்காக கடந்த ஜனவரிமாதம் 6ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 6ம் திகதிவரை மூன்று மாதங்களாக காலை8.30 முதல் பிற்பகல் 4.30 வரை 8 மணித்தியாலங்களுக்கு மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையம் இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


