இலங்கைக்கு வருகை தருவோரின் கவனத்திற்கு!
Thursday, November 30th, 2017
இலங்கைக்கு கொண்டு வரக்கூடிய வெளிநாட்டு நாணயத்தினது அளவானது 15000 அமெரிக்கா டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் தொகை 10,000 அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதிமுதல் புதிய நடைமுறை அமுல்படுத்தப்படும் என சுங்க ஊடக பேச்சாளரும், பிரதி பணிப்பாளருமான சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். கடந்த வாரம் அரசாங்கத்தால்வழங்கப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கைக்கு வருகை தரும் ஒருவர் 10,000 அமெரிக்க டொலருக்கு கூடுதலாகவோ அல்லது ஏனைய வெளிநாட்டு நாணயங்களில் இந்த தொகைக்கு சமமான தொகையை கொண்டு வந்தால், அல்லது இலங்கையில் இருந்து 10,000 அமெரிக்க டொலருக்கு அதிகமாகவோ அல்லது ஏனைய வெளிநாட்டு நாணயங்களில் இந்த தொகைக்கு சமமான தொகையை கொண்டு செல்லுமாறு வேண்டுமானால், சுங்க திணைக்களத்திடம் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில வாழும் எந்தவொரு நபரும் 20,000 ரூபாய் பணத்தை நாட்டிற்கு வெளியே கொண்டு செல்ல அல்லது நாட்டிற்கு கொண்டு வர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|
|


