இலங்கைக்கு நவீன ஆயுதங்களை வழங்கும் ரஷ்யா!

இலங்கை படைகளுக்கு நவீன ஆயுத தளபாடங்களை வழங்குவதற்கு ரஷ்யா முன்வந்துள்ளதாக. இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அலெக்சான்டர் கர்சாவா தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தேசிய நாள் அண்மையில் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் கொண்டாடப்பட்டது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதன் விளைவாகவே இவ்வாறு ஆயுதங்கள் வழங்கப்படவுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் முக்கியமான பல உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.அவற்றில் ரஷ்ய வடிவமைப்பிலான சில முன்னோடி ஆயுத தளபாடங்களை வழங்கும் உடன்படிக்கைகளும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
டெங்கு நோய்: 2 ஆயிரத்து 272 பேர் பாதிப்பு - சுகாதார அமைச்சு!
சமூக இடைவெளியை மீறினால் மதுபான சாலைகளுக்கு மீண்டும் பூட்டு - பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை!
அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்கள் தொடர்பில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியீடு!
|
|